Enable Javscript for better performance
முதியோர் இல்லங்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் புதிய அரசாணை பிறப்பிப்பு: நீதிமன்றத்தில் அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் இல்லங்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் புதிய அரசாணை பிறப்பிப்பு: நீதிமன்றத்தில் அரசு தகவல்

    By DIN  |   Published on : 28th November 2016 09:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, 

    தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் முதியோர் இல்லங்களில் பராமரிப்பது தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    முதியோர் இல்லங்களை முறைப்படுத்தும் ஆணையத்தை அமைக்கக் கோரியும், அதற்கான விதிமுறைகளை வகுக்கக் கோரியும், சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு பிளீடர் எம்.கே.சுப்பிரமணியன், மத்திய, மாநில சமூக நல இயக்குனர்கள் உள்ளிட்ட 57 பேர் அளித்த கருத்துக்களில், 30 கருத்துக்களை தொகுத்து நவம்பர் 23-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை உடனடியாக அமல்படுத்தப்படும் என்றார்.

    அதைத் தொடர்ந்து, தமிழக அரசின் அரசாணை குறித்து மனுதாரர் திருப்தி தெரிவித்தார். மேலும் அவர் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்களை ஆய்வு செய்யவும் கோரினார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, அரசு பிளீடர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai