Enable Javscript for better performance
ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு: திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு: திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 28th November 2016 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    _MG_5367

    ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் திட்டத்தை கண்டித்து புதுவை தெற்கு மாநில திமுக சார்பில் இன்று காந்தி வீதி அமுதசுரபி இந்தியா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க–வின் பிரதமர் மோடியின் ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால் கடந்த 20 நாட்களாக அனைத்து தப்பினரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கருப்பு பணம் ஒழிப்புக்கு தான் இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பு சொன்னாலும், அதற்கான முன் தயாரிப்புகளோ அல்லது மக்கள் படும் இன்னல்களை போக்க உடனடி நடவடிக்கைகளோ எதுவும் இல்லை.

    வேண்டிய அளவு ரூபாய் நோட்டுக்கள் இருப்பு இல்லாததால் வங்கிகளும் முழுமையாக இயங்க முடியவில்லை. 

    குடும்ப செலவுக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகளுக்கும் செலவுகளை சந்திக்க மக்களிடம் பணம் இல்லை.

    இதற்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என அதன் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

    அதன்படி தெற்கு மாநில திமுக சார்பில்,காந்தி வீதியில் உள்ள அமுதசுரபி இந்தியன் வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமை தாங்கினார்.

    மாநில திமுக துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதா குமார், மாநில பொருளாளர் சண். குமாரவேல், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, ஹேமாபாண்டுரங்கன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், மாறன், தட்சிணாமூர்த்தி, வேலவன், வேலன், அருட்செல்வி, தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், சக்திவேல், ராமசாமி, சீத்தாராமன், லோகு, வெங்கடாஜலபதி, ரவிச்சந்திரன், கலிய கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai