Enable Javscript for better performance
ரூபாய் நோட்டுகள் பிரச்னை; முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டுகள் பிரச்னை; முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

    By புதுச்சேரி,  |   Published on : 28th November 2016 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IMG-20161128-WA0022

    ரூபாய் நோட்டுகள் பிரச்னையில் மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    500 /1000  ருபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து மக்களை அலைக்கழிப்பதாக பாஜகவை கண்டித்து, இன்று அனைத்து தொகுதிகளிலும் வட்டார காங்கிரஸ் சார்பாக மத்திய அரசு அலுவலகங்களிலும்,வங்கிகளின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்க பட்டது.

    அதன்படி இந்திராகாந்தி சிக்னல் அருகில் உள்ள எச்டிஎப்சி வங்கி முன்பு முதல்வர் நாராயணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் ரெட்டியார்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி, லாஸ்பேட்டை நேதாஜி சதுக்கம் பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார்.

    வில்லியனூரில் அமைச்சர் நமச்சிவாயம், கிருமாம்பாக்கத்தில் அமைச்சர் கந்தசாமி, காலாப்பட்டில் அமைச்சர் ஷாஜஹான், ஏனாமில் அமைச்சர் மல்லாடி, காரைக்காலில் அமைச்சஅமைச்சர்ர் கமலக்கண்ணன், மாஹேவில் முன்னாள் அமைச்சர் வல்சராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai