Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு பிரச்னை: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஈரோடு, 

    ரூபாய் நோட்டு பிரச்னை தொடர்பாக ஈரோடு படை வீரர்கள் மாளிகை அருகே இடதுசாரி கட்சிகள் திங்கள்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலர் எஸ்.டி.பிரபாகரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் வி.பி.குணசேகரன், மாவட்டச் செயலர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.முóத்துசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், டிச.31-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும், கருப்பு பணத்தை பதுக்கிவைத்திருக்கும் கார்பரேட் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    சுவிஸ் வங்கி உள்ளிட்ட அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கருப்பு பணத்தை பறிமுதல் செய்து அனைத்து ஏழைகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி கோஷம் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிóஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.பா.மோகன், மார்க்சிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜ்குமார், ஈரோடு வட்டச் செயலர் பி.ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai