Enable Javscript for better performance
வங்கிப் பணத்துடன் மாயமான ஓட்டுநரின் மனைவி சரண்- Dinamani

சுடச்சுட

    

    வங்கிப் பணத்துடன் மாயமான ஓட்டுநரின் மனைவி சரண்

    By பெங்களூரு  |   Published on : 28th November 2016 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் வங்கிப் பணத்துடன் தலைமறைவான டோம்னிக்கின் மனைவி இன்று போலீசில் சரணடைந்துள்ளார்.

    வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் வாகன ஓட்டுநராக பெங்களூரு லிங்கராஜபுரத்தைச் சேர்ந்த டோமினிக் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், புதன்கிழமை வங்கிக்கு ரூ.1.37 கோடி கொண்டு சென்ற வாகனத்தை நூதன முறையில் எடுத்துக் கொண்டு டோமினிக் தப்பினார். 

    வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர தேடுதல் நடத்தினர். இந்த நிலையில், வியாழக்கிழமை மெளன்ட் கார்மல் கல்லூரி வளாகம் அருகே மாயமான வாகனம் மீட்கப்பட்டது. அதில் ரூ.45 லட்சம் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. மீதமுள்ள பணத்துடன், டோமினிக் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

    இந்நிலையில் இன்று காலை டோம்னிக்கின் மனைவி எல்வின், ரூ.79.80 லட்சத்துடன் போலீசில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் தலைமறைவாக உள்ள கணவர் டோம்னிக் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai