Enable Javscript for better performance
வருமான வரி சட்டதிருத்த மசோதா மக்களவையில் தாக்கல்- Dinamani

சுடச்சுட

    
    parliment

    புதுதில்லி

    கணக்கில் காட்டாத பணத்துக்கு 75 சதவீத வரி மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கும் வைகையிலான புதிய சட்டதிருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்ய்யப்பட்டது. 

    நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டால் வருமானவரித் துறை விசாரணை நடத்தும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது.

    இந்நிலையில் கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் வகையில் வருமான வரி சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன்படி கணக்கில் காட்டாத பணத்துக்கு 75 சதவீத வரை மற்றும் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என முன்மொழியப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருவாய் செயலர் ஹஷ்முக் அதியா கூறும் போது கருப்பு பணம் விவகாரத்தில் மக்களுக்கு ஒரு பயம் இருக்க வேண்டும் எனில் புதிய விதிமுறைகள் அவசியம் என்று கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai