Enable Javscript for better performance
முசிறியில் தனியார் பேருந்து மோதி மளிகைகடைகாரர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    முசிறியில் தனியார் பேருந்து மோதி மளிகைகடைகாரர் சாவு

    By பழனிவேல்  |   Published on : 30th November 2016 06:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மளிகைக்கடைக்காரர் சம்பவயிடத்திலயே உயிரிழந்தார்.

    முசிறி அருகிலுள்ள நாச்சியார்புதூரை சேர்ந்த முத்துசாமிபிள்ளை மகன் துரைசாமி (59) இவர் அப்பகுதியில் மளிகைகடை நடத்தி வந்தவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் முசிறிக்கு சென்று கடைக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு திருச்சி - நாமக்கல் புறவழிச்சாலையிலுள்ள சந்தப்பாளையம் பிரிவில் திரும்பும்போது எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த துரைசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவயிடத்திலயே இறந்தார்.

    தகவலறிந்த முசிறி காவல்துறையினர் சம்வயிடம் சென்று இறந்த துரைசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடி சென்ற பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai