Enable Javscript for better performance
அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 12:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    NARAYANASAMY

    புதுச்சேரி

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன்  அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையை சேர்ந்த அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும். இதன் மூலம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 421 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2 கோடியே 56 லட்சம் செலவாகும்.

    இதேபோல் அரசு ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 908 போனஸ் வழங்கப்படும். இதன் மூலம் 26 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள். மேலும் தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.1184 போனசாக வழங்கப்படும். இதனால் 5 ஆயிரம் தினக்கூலி ஊழியர்கள் பயன் பெறுவார்கள். பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ. 1000-ம் போனசாக வழங்கப்படும். இது போல் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.11 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai