Enable Javscript for better performance
அரவக்குறிச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி- Dinamani

சுடச்சுட

    

    அரவக்குறிச்சியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விவசாயி பலி

    By அரவக்குறிச்சி,  |   Published on : 08th October 2016 02:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    க.பரமத்தி அருகே அடையாளம் தெரியாத வாகன் மோதி விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கரியாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி 36 விவசாயி, இவர் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு லைசன்ஸுக்கு பேச் போட சான்றிதழ் வாங்க க.பரமத்தி காவல் நிலையத்திற்கு வந்து விட்டு மோட்டர் சைக்கிளில் கரூர் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கரூர் நோக்கி சென்றார். அப்போது செல்வபுரம் அருகே எதிரே வந்த மணல் லாரி மோதி நிற்காமல் சென்றது.

    இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயை இறந்தார். க.பரமத்தி போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் தொடர்பாக க.பரமத்தி காவல் ஆய்வாளர் குணசேகரன் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai