Enable Javscript for better performance
ஆயுத பூஜை:  புதுவையில் குவியும் பூசணிக்காய், சாமந்தி பூ- Dinamani

சுடச்சுட

    

    ஆயுத பூஜை:  புதுவையில் குவியும் பூசணிக்காய், சாமந்தி பூ

    By DIN  |   Published on : 08th October 2016 04:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, 

    ஆயுதபூஜை பண்டிகையை அடுத்து புதுவையில் பூசணிக்காய் மற்றும் சாமந்திப் பூக்கள் வரத் தொடங்கியுள்ளன.

    நாடு முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை திங்கள்கிழமை கொண்டாட ப்படவுள்ளது. பல்வேறு தொழில்களை செய்வோரும் ஆயுதபூஜையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல வீடுகளிலும் அரிவாள், கத்தி, விவசாய உபகரணங்கள் உள்ளிட்டற்றுக்கு பூஜைகள் செய்யப்படும்.

     இந்த பூஜையின் முக்கிய அம்சமாக பொரி, சாமந்திப் பூ, பூசணிக்காய் ஆகியவை இருக்கும். பூசணிக்காய், சாமந்திப் பூக்கள் ஆயுதபூஜையை குறி வைத்தே சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால் ஆயுதபூஜையொட்டிய காலங்களில் மட்டுமே கிடைக்கும் இவற்றின் விலையும் சற்று அதிகமாக இருக்கும்.

     இந்த நிலையில் புதுவையில் உள்ள பெரிய மார்க்கெட்டில் பூசணிக்காய், சாமந்திப் பூ, பொரி ஆகியவற்றின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதலே இவை மார்க்கெட்டுக்கு வரத் தொடங்கின.

    வரத்து போதவில்லை: கணிசமான அளவில் பூசணிக்காய், சாமந்திப்பூ வந்தாலும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அதிகளவில் வரத்து இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து மட்டுமே சாமந்திப் பூ வருகிறது.

    வரத்து குறைந்ததன் காரணமாக விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்புவரை ரூ. 120 முதல் 140 வரை இருந்த ஒரு கிலோ சாமந்திப் பூவின் விலை, சனிக்கிழமையன்று ரூ. 190 முதல் ரூ. 220 வரை அதிகரித்துள்ளது. அதே வேளையில் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ. 300 வரை விலை போகவும் வாய்ப்பு உள்ளது. இதேபோல பிற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.

     அதேபோல பூசணிக்காய் ஒரு கிலோ ரூ. 25 வரை சனிக்கிழமை விற்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 15-ஆக மட்டுமே பூசணிக்காயின் விலை இருந்தது. ஒரு கிலோ பொரி ரூ. 80-க்கும் அவல் ரூ. 70-க்கும் பெரிய மார்க்கெட்டில் சனிக்கிழமை விற்பனையாகின. ஆயுத பூஜையின் முக்கிய அங்கமான வாழை மரம்

    முன்கூட்டியே கொண்டாட்டம்: ஞாயிற்றுக்கிழமையன்றும் ஆயுத பூஜையன்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால் சனிக்கிழமையே பலர் தங்களது அலுவலகங்களில் ஆயுதபூஜையை கொண்டாடினர். இதன் காரணமாக பூஜைப் பொருள்களின் விற்பனை கணிசமான அளவுக்கு இருந்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai