Enable Javscript for better performance
ஆளுநருடனான சந்திப்பு நட்பு அடிப்படையிலானது இதில் அரசியல் எதுவும் இல்லை: வைகோ பேட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநருடனான சந்திப்பு நட்பு அடிப்படையிலானது இதில் அரசியல் எதுவும் இல்லை: வைகோ பேட்டி

    By DIN  |   Published on : 08th October 2016 02:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaico (2)

    சென்னை

    ''தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை நட்பு ரீதியாக சந்தித்துப் பேசினேன். இதில் அரசியல் எதுவும் இல்லை. தமிழகத்தில் பொறுப்பு, இடைகால முதல்வரை நியமிக்க வேண்டியதில்லை'' என்று வைகோ கூறினார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்த மதிமுக தலைவர் வைகோ மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில்,

    ''ஆளுநருடனான சந்திப்பு நட்பு அடிப்படையிலானது. இதில் அரசியல் எதுவும் இல்லை. சந்திப்பின்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நாட்களை நினைவு கூர்ந்தார். நான் 10, 15 நாட்களாக சென்னையில் இல்லை. வந்தவுடன் இன்று முதல்வரின் நலம் குறித்து விசாரித்தேன்.

    நேற்று ஆளுநரை மரியாதை நிமிர்த்தமாக சந்திக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். அவரும் தாராளமாக வாருங்கள் என்று கூறி இருந்தார். அதன் அடிப்படையில்தான் சென்று சந்தித்தேன்'' மேலும் பொறுப்பு அல்லது துணை முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai