Enable Javscript for better performance
களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    களியக்காவிளை, 

    களியக்காவிளை அருகே மினிடெம்போவில் நூதன முறையில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை பறக்கும்படை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

    குமரி மாவட்ட பறக்கும்படை வட்டாட்சியர் இக்னேஷியஸ் சேவியர் தலைமையில் துணை வட்டாட்சியர் பாபு ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் களியக்காவிளை அருகே தையாலுமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக விறகு ஏற்றி வந்த மினிடெம்போவை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினர். அதன் ஓட்டுநர், கிளீனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

    தொடர்ந்து மினி டெம்போவில் இருந்த விறகை அகற்றிவிட்டு பார்த்ததில் அடிப்பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து அதன் மேல் விறகு அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிந்தது. ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து மினி டெம்போவை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai