Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழக காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் 

    By DIN  |   Published on : 08th October 2016 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

    சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று நடந்த கூட்டத்திற்கு பின் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு துரோகம் செய்வதாக குற்றம் சாட்டினார்.

    மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும்

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.ஆர்.ராமசாமி, ப,சிதம்பரம், ஈவிகேஎஸ். இளங்கோவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai