Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: தமிழக பாஜக தலைவர்கள் நாளை அமித்ஷாவுடன் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: தமிழக பாஜக தலைவர்கள் நாளை அமித்ஷாவுடன் சந்திப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 11:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amith_sha

    சென்னை: 

    காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நாளை சந்திக்கவுள்ளனர்.

    காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு  விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது. இதையடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தால், மத்திய பாஜக அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை, தமிழக பாஜக தலைவர் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக  வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai