Enable Javscript for better performance
திம்பம் மலைப்பாதையில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்- Dinamani

சுடச்சுட

    

    திம்பம் மலைப்பாதையில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 04:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை 8 ஆவது வளைவில் கர்நாடக அரசுப்பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் இரு மாநிலங்களிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் அபாயகரமான 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதன் வழியாக இரு மாநில சரக்கு வாகனங்கள், பயணிகள் பேருந்துகள் பயணிக்கின்றன. மைசூரில் இருந்து கோவைக்கு பயணிகள் ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பேருந்துகள் திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அதனைத் தொடர்ந்து சாம்ராஜ்நகரில் இருந்து தாராபுரத்துக்கு தேங்காய்தொட்டி பாரம் ஏற்றிய லாரியும் கொண்டிருந்தது. இந்நிலையில் 8 ஆவது வளைவில் கர்நாடக பேருந்து திரும்பும் போது பின்னால் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து  அரசு பேருந்து மீது மோதி நின்றது. அப்போது கர்நாடக அரசுபேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தினர்.

    இதனால் அசம்பாவிதம் ஏதுமின்றி பயணிகள் உயிர் தப்பியனர். சாலையின் மத்தியில் லாரி பழுதாகி நின்றதால் மீட்பு வாகனம் வரும் வரை காத்திருக்காமல், அங்குள்ள பயணிகள்,வாகன ஓட்டிகள் ஒன்றாக சேர்ந்து லாரியை அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, வாகனப் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து காரணமாக இரு மாநிலங்களிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai