Enable Javscript for better performance
போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: அதிக கட்டணம் வசூலித்த   நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்து- Dinamani

சுடச்சுட

    

    போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை: அதிக கட்டணம் வசூலித்த   நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்துகள் சிக்கின

    By DIN  |   Published on : 08th October 2016 04:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை

    ஆயுதபூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பலர் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்து ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் ஆம்னி பேருந்து கட்டணம் முறையற்ற வகையில் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு .

    கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.

    வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்கள் கோயம்பேடு பேருந்து நிலையம், மதுரவாயல், போரூர், ஸ்ரீபெரும்புதூர் சுங்கசாவடிகளிலும், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    ஒரே நாள் இரவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேலான ஆம்னி பேருந்துகள் சிக்கின. முறையான ஆவணங்கள், தகுதி சான்று இல்லாமல் ஓட்டியது, உரிய வரி செலுத்தாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டது தெரிந்தது.

    கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி தலைமையில் நடந்த சோதனையில் அதிக கட்டணம் வசூலித்ததாக 4 ஆம்னி பேருந்துகள் பிடிப்பட்டன.

    சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு வழக்கமான கட்டணம் ரூ.1200-க்கு பதிலாக ரூ.2200 வசூலிக்கப்பட்டது. கம்பத்திற்கு ரூ.600-க்கு பதிலாக ரூ.1200-ம், காரைக்காலுக்கு ரூ.500-க்கு பதிலாக ரூ.950-ம், திருவனந்தபுரத்திற்கு ரூ.1400-க்கு பதிலாக ரூ.2100 வசூலிக்கப்பட்டன.

    பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்து இருந்ததை அதிகாரிகள் உறுதிசெய்தனர். ஆனால் பயணிகளின் பயணம் பாதிக்க கூடாது என்பதற்காக அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க ஆம்னி பேருந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

    அதனை ஏற்று கொண்ட உரிமையாளர்கள் 4 ஆம்னி பஸ் பயணிகளிடம் இருந்தும் அதிகமாக வசூலித்த பணத்தை திருப்பி கொடுத்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கூடுதல் தொகை திருப்ப கிடைத்ததும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இது தவிர 150 ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டன. ஒரே நளில் மட்டும் ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டன. இந்த சோதனை 13-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai