Enable Javscript for better performance
மனைவியை 124 முறை கத்தியால் குத்திய வங்கி ஊழியர் கைது- Dinamani

சுடச்சுட

    

    லண்டன்

    இங்கிலாந்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் தனது மனைவியை 124 முறை கத்தியால் குத்தியுள்ளார்.

    இந்தியாவைச் சேர்ந்த சஞ்சய் நிஜவான் இங்கிலாந்தில் வங்கியாளராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியுடன் இங்கிலாந்து குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்.

    சமீப காலமாக கடும் மன அழுத்தத்தில் இருந்த சஞ்சய்,அதிக சம்பளம் கிடைக்கக் கூடிய தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவரது சொத்துக்களில் சிலவற்றை 6,70,000 யூரோக்களுக்கு அடமானம் வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி, சஞ்சய்யிடம் விவாகரத்து கேட்டுள்ளார். இதைதொடர்ந்து அவர்களுக்குள் நடந்த தகராறில் 

     சஞ்சய் தனது 4 வயது மகன் முன்னிலையில், கோடாரி மற்றும் கத்தியால் தனது மனைவியை தாக்கியுள்ளார். இதில் அவரது மனைவிக்கு 124 வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai