Enable Javscript for better performance
மானாமதுரையில் இந்து முன்னனி, பாஜக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்- போலீசில் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரையில் இந்து முன்னனி, பாஜக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்- போலீசில் புகார்

    By DIN  |   Published on : 08th October 2016 04:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்து முன்னனி, பாஜக நிர்வாகிகளுக்கு முஸ்லீம் அமைப்பிலிருந்து கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    மானாமதுரை போஸ்டாபீட்ஸ் தெருவில் குடியிருப்பவர் கலியாணித்தேவர் இவர் இந்து முன்னனி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இண்லேண்ட்  கடிதம் வந்தது அந்த கடிதத்தை பிரித்து படித்த கலியாணித்தேவர் அதிர்ச்சியடைந்தார்.

    அதில் நீங்களும் கருப்பையா, ராஜேந்திரன், அழகர்சாமி ஆகியோரும் சேர்ந்து உடைகுளத்தில் பள்ளிவாசல் அமைக்கவிடாமலும் சந்தனக்கூடு ஊர்வலத்தையும் தடுத்தீர்கள்.உங்கள் உயிர் அல்லாவுக்கு இறையாகும். உங்களை மார்கெட் பொதுமக்கள் முன்னிலையில் அல்லாவுக்கு கூடிய விரைவில் இறையாக்குவோம்.நபி அல்லா புகழ் வாழ்க என எழுதப்பட்டுள்ளது.

    இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கருப்பையா, அழகர்சாமி ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகளாக இருந்தவர்கள், ராஜேந்திரன் மானாமதுரை நகர் பாஜக தலைவராக உள்ளார். கடிதத்தின் பின்புறம் அனுப்பதல் முகவரியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த  மிரட்டல் கடிதம் குறித்து கலியாணித்தேவர் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் மாவட்ட போலீஸ் எஸ்.பி ஜெயச்சந்திரனை சந்தித்தும் புகார் மனு அளிக்கப்பட்டது. போலீசார் கடிதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.

    சமீபத்தில் தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் மானாமதுரையைச் சேர்ந்த இந்து முன்னனி, பாஜக நிர்வாகிகளுக்கு இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai