Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பாஜக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடும்: தமிழிசை செளந்தரராஜன்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பாஜக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடும்: தமிழிசை செளந்தரராஜன்

    By DIN  |   Published on : 08th October 2016 03:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து நலம் விசாரிக்க  தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று மதியம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி பாஜக கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடும் என்று கூறினார்.

    மேலும் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வருவது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார். தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி மத்திய அரசிற்கு கடிதம் எழுதி உள்ளது பற்றி கேட்டதற்கு, அது பற்றி பதில் கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai