Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 08th October 2016 03:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், 5 நாள் சிறப்பு யாக வழிபாட்டின் 2-ம் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் ஆயுள்மந்த்ரா யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆயுள் விருத்தி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் அதிமுக நகரச் செயலாளர் மனோகரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கலச பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    சென்னை ஆர்.கே. நகர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து  திருவொற்றியூர் தியகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில் வரை அதிமுகவினர் பாத யாத்திரை நடத்தினர். அதிமுக அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

    தேனி மாவட்டம், போடியில் நந்தவன காளியம்மன் கோவில், மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில், முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai