Enable Javscript for better performance
முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் பணிகளை தொடங்குவார்: இல.கணேசன்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று மீண்டும் பணிகளை தொடங்குவார்: இல.கணேசன்

    By DIN  |   Published on : 08th October 2016 10:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ila-ganesan

    சென்னை

    தமிழக பா.ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசன், மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இன்று அவர்,செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் மற்ற கட்சிகளுக்கு இருக்கும் ஆர்வத்தைவிட பா.ஜனதா கட்சிக்கு அதிகமாக இருக்கிறது. காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் பா.ஜனதா ஆதரிக்கிறது.

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க போவது இல்லை என மத்திய அரசு எப்போதும் சொல்லவில்லை. வாரியத்தை அமைக்கக்கூடாது என கர்நாடகாவின் வாதத்தையும் ஏற்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்றத்தில் சட்டமாக கொண்டு வந்து அமைக்கப்பட்டால்தான் அந்த வாரியங்கள் அதிகாரப்பூர்வமாக இருக்கும். இதில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுப்பார்.

    காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தது வரவேற்கத்தக்கது. நான் எம்.பி. ஆனதும் மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் முதல்வர் ஜெயலலிதா முதல் நபர் ஆவார். அவர் பூரண நலம் பெற்று மீண்டும் பணிகளை தொடங்குவார் என்று அவர் கூறினார்.

    அப்போது அவரிடம், சுப்பிரமணியசாமி கடிதம் தொடர்பாக நிருபர்கள் கேட்டதற்கு, “சுப்பிரமணியசாமி பற்றி எல்லாம் என்னிடம் கேட்க வேண்டாம். அவரும் பா.ஜனதாவில்தான் இருக்கிறார்” என்றார்.

    மேலும், “முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி சென்னை வருவாரா?” என நிருபர்கள் கேட்டதற்கு, “பிரதமர் மோடி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி எனக்கு தெரியாது. வரமாட்டார் என சொல்லவும் முடியாது” என இல.கணேசன் தெரிவித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai