Enable Javscript for better performance
ராமேசுவரம் திருக்கோயிலில் அக்-11 ஆம் தேதி கோயில் நடைகள் அடைப்பு- திறப்பு நேரம் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் அக்-11 ஆம் தேதி கோயில் நடைகள் அடைப்பு- திறப்பு நேரம் மாற்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 12:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவையொட்டி அக்டோபர்,11 ஆம் தேதி  மாலையில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் திருக்கோயில் நடைகள் அடைப்பு- திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் சனிக்கிழமை தெரிவித்தார். 

    இது குறித்து மேலும் இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தது.  

    ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் நவராத்திரிதிருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கப்பட்டு  நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வரும்  இந்த திருவிழாவில்  கடைசி திருவிழாவும் மற்றும்  விஜயதசமியை நாளை முன்னிட்டும் திருக்கோயில் சார்பாக ராமேசுவரம் சம்பை கிராம் பகுதிக்கு செல்லும் சாலை மகர் நோம்பு திடலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதனையொட்டி அன்று திருக்கோயிலிருந்து மாலை 4.30 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன்  எழுந்தருளி  நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெறும் மகர் நோம்பு திடலுக்கு சென்றடையும்.

    இதனால் திருக்கோயில் நடைகள் மாலை 4.30 மணி சாத்தப்படும் எனவும்,அதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து அம்மன் அப்பகுதியிலுருந்து புறப்பாடகி திருக்கோயிலுக்கு  வந்தடைந்தவுடன் கோயில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றவுடன் வழக்கம்போல் கோயில் நடைகள் சாத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai