Enable Javscript for better performance
வட கிழக்கு பருவ மழை வரும் 20-ம் தேதி தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வட கிழக்கு பருவ மழை வரும் 20-ம் தேதி தொடங்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    By DIN  |   Published on : 08th October 2016 12:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை:

    இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை பருவகால மாற்றத்தால் முன்கூட்டியே  தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் எஸ்.பி. தம்பி கூறுகையில், வட கிழக்கு பருவ மழை வரும் 20-ம் தேதி தொடங்கும் என்று எதிர் பார்ப்பதாக தெரிவித்தார்.

    தற்போது தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வருகிறது. தென் மேற்கு பருவமழை முடிந்தது. வட கிழக்கு பருவ மழை தொடங்கிவிடும். அடுத்த 3 மாதங்களில் 40 செ.மீ அளவுக்கு மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சராசரி மழை அளவு 48 சதவீதம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் உள் மாவட்டங்களில் 40 முதல் 50 சதவீதமும், கடலோர மாவட்டங்களில் 60 சதவீதமும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai