Enable Javscript for better performance
விழுப்புரத்தில் நாட்டு வெடுகுண்டு வீசி ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் நாட்டு வெடுகுண்டு வீசி ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

    By DIN  |   Published on : 08th October 2016 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம், 

    விழுப்புரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பைக்கில் சென்ற ரௌடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீஸர் கைது செய்தனர்.

       விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த ஜனா என்கிற ஜனார்த்தனன்(32) கடந்த 4-ஆம்தேதி, திருக்கோவிலூரில் ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் விழுப்புரத்தில் நீதிமன்றத்தில் தனது கூட்டாளிகளுடன் ஆஜராகிவிட்டு பைக்கில் குயிலாப்பாளையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகே மர்ம கும்பலால் நாட்டு வெடி குண்டு வீசி, பின்னர் அரிவாளால் வீசி படுகொலை செய்யப்பட்டார்.

     இது தொடர்பாக டிஎஸ்பிகள் வீமராஜ், வெள்ளைச்சாமி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், போலீஸôருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரி அரியங்குப்பத்தைச் சேர்ந்த அஸ்வின்(28), முதலியார் சாவடியைச் சேர்ந்த விக்னேஸ்வர்(27)ஆகிய இருவரை கைது செய்தனர்.

      இதையடுத்து, இவர்கள் தனது கூட்டாளிகள் குயிலாப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, குண்டுபிரகாஷ், சரவணன், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வீசி ஜனார்த்தனனை அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியதையடுத்து, திருவக்கரை பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ்(25), சரவணன்(25), பாஸ்கர்(23) ஆகியோரை போலீஸர் கைது செய்தர் என்று செய்தியாளர்களிடம் எஸ்.பி. நரேந்திரன் நாயர் கூறினார்.

    மேலும், அவர்களிடம் இருந்து 5 அரிவால், 2 பைக்களையும் போலீஸôர் பறிமுதல்செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai