Enable Javscript for better performance
68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி உயிரிழந்தார்.- Dinamani

சுடச்சுட

    

    68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி உயிரிழந்தார்.

    By DIN  |   Published on : 08th October 2016 03:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bal_tapasvi

    ஹைதராபாத் நகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவியான ஆராதனா(13) என்பவர் ஜீவசமாதி அடைய தீர்மானித்தார்.  இவரது தந்தை செகந்திராபாத் பகுதியில் உள்ள பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

    ‘சந்த்தாரா’ எனப்படும் ஜீவசாமாதி நிலையை அடைய  எண்ணிய ஆராதனாவின் உண்ணாநிலை சமீபத்தில் பத்தாவது வாரத்தை நெருங்கியபோது உள்ளூர் ஊடகங்களில் ஏராளமான விளம்பரங்கள் வெளியாகின. ஆரதனாவுடன் பலர் செல்பி எடுத்துக்கொள்ள பிரியப்பட்டனர்.

    செகந்திராபாத் பகுதியை சேர்ந்த தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மா ராப் கவுட் முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை ஆராதனா முடித்து கொண்டார். இதையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆராதனா, இருநாட்களாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai