Enable Javscript for better performance
அக்17,18 தேதிகளில் ரயில் மறியல் போராட்டம்: ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற- Dinamani

சுடச்சுட

    

    அக்17,18 தேதிகளில் ரயில் மறியல் போராட்டம்: ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், இரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்பு

    By சென்னை  |   Published on : 15th October 2016 01:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்திட்ட மத்திய அரசைக் கண்டித்தும் அக்டோபர் 17, 18, இருதினங்கள், 48 மணி நிரம் நடைபெறும் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில், மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உட்பட மாநில தலைவர்கள் அனைவரும் பஙகேற்கின்றனர்.

    நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்திட்ட தீர்ப்பை ஏற்றுக் கொண்ட, நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசு, தீடீர் என 03.10.2016 அன்று, மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கின்றது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தான் மத்திய அரசு 1990ல் நடுவர் மன்றம் அமைத்தது, 2007ஆம் ஆண்டு வெளிவந்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளிடாமல் அலட்சியப்படுத்திய மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தான் 2013ல் அரசிதழில் வெளியிட்டது. நடுவர் மன்றம் அமைக்கவும், அரசிதழில் வெளியிடவும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை ஏற்ற மத்திய அரசு தற்போது மட்டும் மறுப்பது ஏன்?

    நடுநிலையோடு செயல்பட வேண்டிய, மத்திய அரசு பாரபட்சமாக கர்நாடகத்திற்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டிற்கு எதிராகவும் மோடியின் மத்திய அரசு செயல்படுவது, தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தும். பிரிவினை வாதிகளை ஊக்கப்படுத்தும் பேரபாயம் கொண்டதாகும்.  

    தமிழ்நாட்டிற்கு எதிராக, வஞ்சகம் நிறைந்த துரோகத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து, விவசாயிகள் கூட்டியக்கம் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டம் தீர்மானித்தபடி தமிழ்நாடு முழுவதும் வரும் 17,18 திங்கள், செவ்வாய் ஆகிய இருதினங்கள் 48 மணி நேரம் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai