Enable Javscript for better performance
இயக்குநர் சமுத்திரகனிக்கு மணிவண்ணன் விருது: கோவையில் நாளை வழங்கப்படுகிறது- Dinamani

சுடச்சுட

    

    இயக்குநர் சமுத்திரகனிக்கு மணிவண்ணன் விருது: கோவையில் நாளை வழங்கப்படுகிறது

    By கோவை  |   Published on : 15th October 2016 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2016-ஆம் ஆண்டுக்கான மணிவண்ணன் விருதுக்கு இயக்குநர் சமுத்திரகனி, எழுத்தாளர் தமிழ்நதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16) நடைபெறும் நிகழ்ச்சியில் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

    மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் பெயரில், கோவையைச் சேர்ந்த நாய் வால் திரைப்பட இயக்கம் என்ற அமைப்பு கடந்த 2 ஆண்டுகளாக விருது வழங்கி வருகிறது. அதன்படி, 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணா கலையரங்கில் நடைபெறுகிறது.

    இதில், அப்பா திரைப்படத்துக்காக இயக்குநர் சமுத்திரகனிக்கும், பார்த்தீனியம் நாவலுக்காக கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழ்நதிக்கும் விருது வழங்கப்பட உள்ளது.

    இந்த விழாவில், எழுத்தாளர் பாமரன், மணிவண்ணனின் உதவியாளர் ரங்கநாதன், மருத்துவர் பெரியார் செல்வி, கவிஞர் பாபு, நடிகர் நமோ நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
    இதற்கான ஏற்பாடுகளை நாய் வால் திரைப்பட இயக்கத்தின் செயலர் பெ.மயில்வண்ணன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai