Enable Javscript for better performance
உதகையில் மலை ரயில் தினம் அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உதகை

    உதகைக்கு முதன்முறையாக மலை ரயில் இயக்கப்பட்ட தினம் மலை ரயில் தினமாக அனுசரிக்கப்பட்டது.

     நீலகிரி மாவட்டத்திற்கு முதன்முதலில் மேட்டுப்பாளையத்திலிருந்து  குன்னூர் வரையே மலை ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓராண்டு கழித்து குன்னூரிலிருந்து உதகை வரை மலை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இவ்வாண்டில் உதகை மலை ரயில் சேவை 108 வருடங்கள் முடிந்து 109வது ஆண்டில்  அடியெடுத்து வைப்பதையொட்டி உதகை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சிறப்பு விழா நடத்தப்பட்டது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வந்த மலை ரயிலிலிருந்த பயணிகள் உதகை ரயில் நிலையத்தில் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.

    அதைத்தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் மலை ரயில் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் பங்கேற்று கேக்கை வெட்டி சுற்றுலாப் பபணிகள் மற்றும் ரயில் பயணிகளுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து மலை ரயிலில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

     இந்நிகழ்ச்சியில் உதகை வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜன், நீலகிரி பாரம்பரிய நீராவி ரத அறக்கட்டளையின் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai