Enable Javscript for better performance
உதகையில் ரயில் மறியல் போராட்டம்-பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    உதகையில் ரயில் மறியல் போராட்டம்-பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 03:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகை, 

    உதகையில் இம்மாதம் 18ம்தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென, நீலகிரி மாவட்ட திமுக செயலர் பா.மு.முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்ராபக பா.மு.முபாரக் தெரிவித்துள்ளதாவது:
     
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் இம்மாதம் 17 மற்றும் 18ம்தேதிகளில் 48 மணி நேர தொடர் ரயில் பாதை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.

    இதில் உதகையில் இம்மாதம் 18ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் உதகை ரயில் நிலையத்தில் ரயில் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க நடத்தப்படும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று முழு ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் முபாரக் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai