Enable Javscript for better performance
உத்தரப் பிரதேச மக்களின் நம்பிக்கையை அகிலேஷ் யாதவ் இழந்துவிட்டார்: பாஜக- Dinamani

சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச மக்களின் நம்பிக்கையை அகிலேஷ் யாதவ் இழந்துவிட்டார்: பாஜக

    By DIN  |   Published on : 15th October 2016 07:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    BJP

    புது தில்லி, 

    உத்தரப் பிரதேச மக்களின் நம்பிக்கையை முதல்வர் அகிலேஷ் யாதவ் இழந்துவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறினார்.

    இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:
    உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலால் ஆளும் சமாஜவாதி கட்சி அச்சத்தில் உள்ளது.

    கடந்த 2012-ஆம் ஆண்டைய சட்டப்பேரவைத் தேர்தலின்போது சமாஜவாதி கட்சி பல வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, அக்காலகட்டத்தில் மாநிலத்தில் நிலவி வந்த வறுமை, லஞ்ச லாவண்யங்கள், அராஜகம் ஆகியவற்றை ஒழிக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் வாக்குறுதி அளித்தார். மேலும், தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்குவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் மாற்றம் வரும் என்றும் அவர் கூறினார்.

    ஆனால், உத்தரப் பிரதேசத்தின் இன்றைய நிலைமை என்ன? மாநிலத்தில் முன்பு இருந்த அராஜகம், ஊழல் ஆகியவை தற்போது பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. இதுதான் முலாயம் சிங் கூறிய மாற்றமா?

    ஒரு முதல்வராக அகிலேஷ் யாதவ் அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்துவிட்டார். சட்டம், ஒழுங்கை பாதுகாத்து மக்களுக்கு நல்ல நிர்வாகம் வழங்குவது முதல் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவது வரை அனைத்திலும் அவர் தோற்றுவிட்டார்.

    இதனால் அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். குறிப்பாக, அகிலேஷ் யாதவ் மீது அவரது தந்தை முலாயம் சிங்கே நம்பிக்கை இழந்துவிட்டார்.

    அதனால்தான், தேர்தல் முடிந்த பிறகே முதல்வர் யார் என்று முடிவு செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியிலிருந்த பகுஜன் சமாஜ், சமாஜவாதி ஆகிய கட்சிகளை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்.

    தங்களின் நலனுக்காக அக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். எனவே, இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி படுதோல்வியடையும் என்றார் ஸ்ரீகாந்த் சர்மா. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai