Enable Javscript for better performance
எகிப்தில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களில் வான்வழித் தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    எகிப்தில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களில் வான்வழித் தாக்குதல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    egypt

    கெய்ரோ, 

    எகிப்தின் சினாய் பகுதியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை முதல் கடும் வான்வழித் தாக்குதலைத் தொடுத்தனர்.

    இது தொடர்பாக எகிப்து பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
    சினாய் தீபகற்ப பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களைக் குறி வைத்து போர் விமானங்கள் வான் வழித் தாக்குதல் நிகழ்த்தின. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள், வாகனங்கள் அந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.

    பயங்கரவாதிகளின் மறைவிடங்களுக்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன என்று எகிப்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

    முன்னதாக, அந்த நாட்டின் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ராணுவம் நிகழ்த்திய பதிலடித் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சி, 2011-ஆம் ஆண்டு நிகழ்ந்த புரட்சியைத் தொடர்ந்து கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் முகமது மோர்ஸி அதிபரானார். அவர் ராணுவத்தால் 2013-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் எகிப்தில், குறிப்பாக சினாய் பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai