Enable Javscript for better performance
கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரூர்,

    கால்நடைகளுக்கு அரசு சார்பில் இலவசமாக தீவனம் வழங்க வேண்டும் என இந்திய கம்யூ.கட்சி வலியுறுத்தியுள்ளது.

    கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் அ.வளர்மணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு போதிய அளவில் தீவனம் இல்லை. இதனால் கால்நடைகள் குறைந்த விலையில் விற்பனையாகிறது. எனவே அரசு சார்பில் கால்நடைகளுக்கு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும்.

     கிராமப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். அரூர் நகரின் அனைத்துப் பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     இதில், கட்சியின் மாவட்ட துணைச் செயலர் கா.சி.தமிழ்குமரன், ஒன்றிய செயலர் என்.அல்லிமுத்து, நிர்வாகிகள் கோ.வெங்கடாசலம், கே.டி.ராஜி, ஐ.கணேசன், எம்.முத்துராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai