Enable Javscript for better performance
கோகைன் விற்கமுயன்ற 2 நைஜீரிய இளைஞர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு, 

    கோகைன் போன்றபோதைப்பொருளை விற்கமுயன்ற 2 நைஜீரிய நாட்டு இளைஞர்களை போலீஸர் கைதுசெய்தனர்.

    இது குறித்து பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸôர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, இந்திராநகர் காவல்சரகத்திற்கு உட்பட்டபகுதிகளில் கோகைன் போன்ற போதைப் பொருள்களை சில வெளிநாட்டினர் விற்றுவருவதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்தது.

    இதை தொடர்ந்து, அங்கு வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்திய குற்றப்பிரிவு போலீஸர் இது தொடர்பாக வழக்கு பதிந்து நைஜீரியாநாட்டை சேர்ந்த இளைஞர்கள் நிடுபே ஜோசப்(25), நிவிதேசண்டேரோஸ் (32) ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.50 கிராம் கோகைன் போதைப்பொருள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இருவரும் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் அவர்களின் கடவுச்சீட்டுகளையும் போலீஸôர் கைவசப்படுத்தினர். விசாரணையின்போது பென் என்பரிடம் இருந்து கோகைன் போதைப்பொருளை வாங்கி, விற்றதாக இருவரும் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து, தலைமறைவாக உள்ளபென்னை தேடும் பணி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக போதைப்பொருள் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்துவிசாரணை நடந்துவருகிறது என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai