Enable Javscript for better performance
சீனா: சுரங்க விபத்தில் 7 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    
    China-coal-mine

    பெய்ஜிங், 

    சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 
    இதுகுறித்து சீன அரசின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
    கெய்úஸôகு மாகாணம் ஸன்ஃபேங் மாவட்டத்தில் உள்ள ரோங்செங் நிலக்கரி சுரங்கத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் 18 பேர் சுரங்கத்தின் உள்ளே வசமாக சிக்கிக் கொண்டனர். 

    பின்னர் விரைந்து வந்த மீட்புப் படையினர் கடுமையாக போராடி 11 பேரை மீட்டனர். எனினும், இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மீட்கப்பட்ட 11 பேரில் 2 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் கிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும், அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று ஜின்ஹுவா தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai