Enable Javscript for better performance
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை- Dinamani

சுடச்சுட

    

    திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை 

    By DIN  |   Published on : 15th October 2016 06:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரம், 
    திருவட்டாறு ஆதிகேசவப்  பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை யொட்டி லட்சார்ச்சனை நடைபெற்றது.

    குமரி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் லட்சார்ச்சனை நடத்த திருக்கோயில்கள் நிர்வாகம் ஏற்பட்டு செய்துள்ளது. இதனையடுத்து திருவட்டாறு ஆதிசேசவப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சனிக்கிழமை லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் மேல்சாந்தி  கேசவன் நம்பூதிரி, பிரதான அர்ச்சகர் நாராயணன் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்பதிவு செய்த 1000 பேர் லட்சார்ச்சனை செய்தனர்.

    அர்ச்சனையில் பங்கேற்ற பக்தர்களுக்கு நிவேத்தியம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் பாரதி, கோயில் மேலாளர் ஆனந்த் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai