Enable Javscript for better performance
தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு காஷ்மீர் விவகாரமே காரணம்: நவாஸ் ஷெரீஃப்- Dinamani

சுடச்சுட

    

    தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு காஷ்மீர் விவகாரமே காரணம்: நவாஸ் ஷெரீஃப்

    By DIN  |   Published on : 15th October 2016 09:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Nawaz-Sharif

    இஸ்லாமாபாத், 

    தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியின்மை நீடிப்பதற்கு காஷ்மீர் விவகாரமே முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

    அஜர்பைஜான் நாட்டுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நவாஸ் ஷெரீஃப், அந்நாட்டின் வர்த்தகத் தலைநகரான பைகுவுக்கு சனிக்கிழமை சென்றார். அப்போது அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்னையாக இருப்பது காஷ்மீர் விவகாரம்தான். இந்த இரு நாடுகள் மட்டுமின்றி தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் அமைதியின்மை நீடிப்பதற்கும் இதுவே முக்கிய காரணம்.
    காஷ்மீர் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதுதொடர்பாக பல முறை அழைப்பு விடுத்தும் கூட பேச்சுவார்த்தைக்கு உடன்பட இந்தியா மறுத்து வருகிறது.

    காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காணவே பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டியதும் அவசியம். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இப்பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும்.

    இந்தியாவின் உரி பகுதியில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா வீண் பழி சுமத்துகிறது. உரி தாக்குதல் சம்பவம் நடைபெற்ற 6 மணிநேரத்துக்குள்ளாகவே பாகிஸ்தானை இந்தியா குற்றம்சாட்டியது. முறையான விசாரணை நடத்தாமல் பாகிஸ்தான் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் கூறப்படுவதை ஏற்க முடியாது.

    பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை என்றார் நவாஸ் ஷெரீஃப்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai