Enable Javscript for better performance
தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்திக்கிறார், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்- Dinamani

சுடச்சுட

    

    தேமுதிக தலைவர் விஜயகாந்தை நாளை சந்திக்கிறார், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

    By DIN  |   Published on : 15th October 2016 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, 

    தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் நாளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு தலைவர்களுடன் சந்திப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு அவர் பல்வேறு தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி, அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்திக்கவுள்ளார்.

           அதேசமயம், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் வந்து விசாரித்தது, திமுக வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

            இது திமுக அணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகுவதற்கான அறிகுறிகள் என கருதப்படும் நிலையில், இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்.       

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai