Enable Javscript for better performance
தொடர்குண்டு வீச்சு சம்பவங்கள்: டிஜிபி தலைமையில் புதுவையில் கொடி அணிவகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    தொடர்குண்டு வீச்சு சம்பவங்கள்: டிஜிபி தலைமையில் புதுவையில் கொடி அணிவகுப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 07:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, 

    புதுச்சேரியில் தொடர் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து முதலியார்பேட்டை மற்றும் வாணரபேட்டை பகுதியில் டிஜிபி சுனில்குமார் கவுதம் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சனிக்கிழமை மாலை கொடி அணிவகுப்பு நடத்தினர்

    புதுச்சேரியில் தொடர் நாட்டு வெடிகுண்டு வீச்சு,தொழிலதிபர்களை மிரட்டுதல் என குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.இதுபோன்ற குற்ற சம்பவங்களை   தடுக்க முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக நாட்டு வெடிகுண்டு சம்பவங்கள் நடைபெற்ற வண்ணாரபேட்டை மற்றும் முதலியார் பேட்டை பகுதியில் டிஜிபி சுனில் குமார் தலைமையில், எஸ்எஸ்பி, எஸ்பிக்கள் மற்றும் காவல்துறையினர் 100 க்கும் மேற்பட்டோர் கொடிஅணிவகுப்பு மேற்கொண்டனர்.

    இதில் நலத்துறை அமைச்சர் கந்தசாமியும் கலந்துகொண்டார்.பின்னர் டிஜிபி அப்பகுதி மக்களிடம் குற்றவாளிகளின் நடமாட்டம் ,ரவுடிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai