Enable Javscript for better performance
நாட்டின் தங்கம் இறக்குமதி 10% குறைந்தது- Dinamani

சுடச்சுட

    
    gold

    புது தில்லி, 

    இந்தியாவின் தங்கம் இறக்குமதி சென்ற செப்டம்பர் மாதத்தில் 10.3 சதவீதம் குறைந்தது. இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

    சென்ற செப்டம்பரில் 180 கோடி டாலர் (சுமார் ரூ.11,880 கோடி) மதிப்புக்கு வெளிநாடுகளிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இறக்குமதியான தங்கம் 200 கோடி டாலருடன் (சுமார் ரூ.13,200 கோடி) ஒப்பிடுகையில் இது 10.3 சதவீதம் குறைவாகும். 

    நடப்பு ஆண்டு பிப்ரவரியிலிருந்து தங்கம் இறக்குமதி குறைந்து வருகிறது. இதனால்,  நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது. மேலும், வர்த்தக பற்றாக்குறையும் 1,016 கோடி டாலரிலிருந்து 833 கோடி டாலராக குறைந்தது.

    தங்கத்தை தவிர, வெள்ளி இறக்குமதியும் 48.47 கோடி டாலரிலிருந்து (சுமார் ரூ.3,200 கோடி) 13.91 கோடி டாலராக (சுமார் ரூ.918 கோடி) குறைந்தது. கடந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கால அளவில் 250 டன்னாக மிகவும் அதிகரித்து காணப்பட்ட தங்கம் இறக்குமதி நடப்பு ஆண்டில் இதே கால அளவில் 60 டன்னாக சரிவடைந்தது என்று அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    உலக அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா, சீனாவுக்கு அடுத்தபடியாக உள்ளது.  கடந்த 2015-16 நிதி ஆண்டில் 650 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக, ஆபரண துறை தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே அதிக அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai