Enable Javscript for better performance
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா: 17இல் கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருவிழா: 17இல் கொடியேற்றம்

    By திருநெல்வேலி  |   Published on : 15th October 2016 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா திங்கள்கிழமை (அக். 17) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இவ்வாண்டு திங்கள்கிழமை காலை 6.43 முதல் 7.25 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இத் திருவிழாவையொட்டி தினமும் கோயிலில் காலை 8 மணி மற்றும் இரவு 8 மணிக்கு அம்மன் சன்னதியில் இருந்து அம்பாள் வீதி உலா நடைபெறும்.  இம்மாதம் புதன்கிழமை (அக்.26) இரவு 1 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீகாந்திமதி அம்பாள், தங்கம் மூலாம் சப்பரத்தில் புறப்பட்டு கீழ ரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை பிரதானச் சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலை வந்தடைகிறது. வியாழக்கிழமை (அக்.27) காலை 11.05-க்கு மேல் 11.45 மணிக்குள் கம்பை நதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும்.  மாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி நகரம் ரதவீதிகளில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    திருக்கல்யாணம்:  வெள்ளிக்கிழமை (அக்.28) கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து காலை 4.15-க்கு மேல் 4.45 மணிக்குள் திருக்கல்யாணத் திருவிழா வைபவம், காலை 9.30 மணிக்கு சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெறும்.

    இதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி வரை 3 தினங்கள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் வைபவம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை (அக்.31) இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் மறுவீடு பட்டணப் பிரவேசம் வீதி உலா நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai