Enable Javscript for better performance
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏர்-இந்தியா செயல்பாட்டு லாபம் ரூ.105 கோடி- Dinamani

சுடச்சுட

    

    பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏர்-இந்தியா செயல்பாட்டு லாபம் ரூ.105 கோடி

    By DIN  |   Published on : 15th October 2016 07:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, 

    பத்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு முதல்முறையாக ஏர்-இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் கடந்த 2015-16-ஆம் நிதி ஆண்டில் ரூ.105 கோடியாக இருந்தது.

    2015-16 ஆண்டுக்கான ஏர்-இந்தியாவின் நிதி அறிக்கையை நிர்வாகக் குழு ஏற்றது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஏர்-இந்தியாவுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து  ஏர்-இந்தியா நிறுவனம் முதல்முறையாக சென்ற 2015-16-இல் ரூ.105 கோடியை செயல்பாட்டு லாபமாக ஈட்டியது.

    கடந்த 2014-15-இல் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு இழப்பு ரூ.2,636 கோடியாக காணப்பட்டது.  செயல்பாட்டு லாப ஈட்டலுக்கு, எரிபொருள் விலையில் ஏற்பட்ட சரிவு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையே முக்கிய காரணங்களாகும். 2014-15- நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-16-இல் ஏர்-இந்தியாவின் எரிபொருள்களுக்கான செலவினம் 31 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

    செயல்பாட்டு லாபம் வளர்ச்சி கண்டுள்ளபோதிலும் ஏர்-இந்தியா 2015-16-இல் ரூ.3,837 கோடி நிகர இழப்பைக் கண்டது. எனினும், கடந்த 2014-15-இல் ஏற்பட்ட இழப்பான ரூ.5,859 கோடியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான அளவாகும்.

    சென்ற 2015-16-இல் ஏர் இந்தியாவின் பயணிகள் எண்ணிக்கை 1.69 கோடியிலிருந்து 6.6 சதவீதம் அதிகரித்து 1.80 கோடியாக இருந்தது. அதேசமயம் வருவாய், ரூ.20,613 கோடியிலிருந்து சற்று குறைந்து ரூ.20,526 கோடியாக காணப்பட்டது. ஏர்-இந்தியா நிறுவனத்தின் மொத்த செலவினத்தில் எரிபொருள்களுக்கான செலவினம் 24 சதவீதமாகவும், வட்டி உள்ளிட்ட செயல்பாடு சாரா செலவினம் 18.4 சதவீதமாகவும் உள்ளன என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai