Enable Javscript for better performance
பயங்கரவாதமே காஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம்: ராம்விலாஸ் பாஸ்வான்- Dinamani

சுடச்சுட

    

    பயங்கரவாதமே காஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம்: ராம்விலாஸ் பாஸ்வான்

    By DIN  |   Published on : 15th October 2016 08:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    paswan

    ஜம்மு, 

    காஷ்மீர் கலவரங்களுக்கு அடிப்படைக் காரணம் பயங்கரவாதமே என்று மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது நிகழ்ந்து வரும் கலவரங்களுக்கு பயங்கரவாதமே அடிப்படைக் காரணம்.

    பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியும்படி பயங்கரவாதிகளால் மிரட்டப்படும் இளைஞர்கள், கலவரத்தின்போது பலியாவது வேதனையை அளிக்கிறது.

    காஷ்மீரை விட்டு வெளியேறுவதைப் பற்றி நினைத்துக் கூட பார்த்திராதவர்கள், தற்போது அமைதியை நாடி வேறு பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர். பயங்கரவாதம் எப்போது ஓய்கிறதோ, அப்போதுதான் காஷ்மீரின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும்.

    பிரிவினைவாதிகள் இந்தியாவை தங்களது நாடாக ஏற்றுக் கொண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பாகிஸ்தானின் கொடியைப் பிடித்து, அந்த நாட்டுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பும் வரை பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பலனுமில்லை.

    ஜனநாயக நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பள்ளிகளைத் திறக்க விடாமல் போராட்டம் நடைபெறுவதால், குழந்தைகளின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.

    ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் நிகழ்த்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரிமை கொண்டாடக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    உரி தாக்குதல் நடைபெற்றபோது அதற்கு பிரதமரைப் பொறுப்பாளியாக்கிய எதிர்க்கட்சிகள், ராணுவ அதிரடித் தாக்குதலுக்கு மட்டும் பிரதமர் உரிமை கொண்டாடக் கூடாது என்று கூறுவது ஏன்?

    நமது எதிரி பாகிஸ்தானின் மக்கள் அல்ல, பயங்கரவாதம்தான். அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது ராணுவத்தின் கையில் விடப்பட வேண்டும் என்றார் பாஸ்வான்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai