Enable Javscript for better performance
பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக புதுவையில் 19-ம் தேதி மாதிரி ஒத்திகை: ஆளுநர் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக புதுவையில் 19-ம் தேதி மாதிரி ஒத்திகை: ஆளுநர் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 03:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி, 

    புதுச்சேரி மாநிலத்தில் பேரிடர்களை எதிர்கொள்வது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன் மாதிரி ஒத்திகை நடத்த வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.

    துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றது முதல் புதுச்சேரியில் தூய்மை, மக்கள் பாதுகாப்புக்கு முக்கியத்தும் அளிக்கும் நடவடிக்கைகளை கிரண்பேடி மேற்கொண்டு வருகிறார். 

    வார இறுதி நாள்களில் நகரம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று கால்வாய்கள், நீராதாரங்களை தூர்வாரி சீரமைக்கும் பணியில் அரசு அதிகாரிகளை ஈடுபடுத்தி வருகிறார்.

    இதன்படி புதுச்சேரியில் ஏற்கெனவே வேல்ராம்பட்டு, திருக்கனூர், பாகூர் ஏரிகள், பெரிய கால்வாய், ரெயின்போ நகர் வெள்ளவாரி கால்வாய், உப்பனாறு கால்வாய் போன்றவை தூர்வாரும் பணி நடந்து வருகின்றன. 

    வரும் 20-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது என வானிலை நிலையம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பலத்த மழையால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் ஆளுநர் கிரண்பேடி பல்வேறு பகுதிகளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் டாக்டர் சத்யேந்திர சிங், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
    இந்நிலையில் அவசர கால பேரிடர் மையத்தில் ஆளுநர் தலைமையில் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரியில் வரும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றத்தை எதிர் கொள்ளும் வகையில் 25 அரசு துறைகளால் வருகின்ற 19 ம் தேதி புதன்கிழமை பேரிடர் மேலாண்மை மையத்தில் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்த கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

    மழைகாலங்களில் எந்த எந்த துறைகள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் கிரண்பேடி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பேரிடர் காலங்களை எதிர்கொள்ள 25 அரசு துறைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவங்களை கொண்டு பேரிடர் மீட்பு மேலாண்மை மையத்தில் வரும் புதுக்கிழமை 19-ம் தேதி மழைக்கால ஒத்திகை நடத்துமாறு கூறியுள்ளேன். 

    இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அப்பொழுதான் இயற்கை பேரழிவிலிருந்து மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார் .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai