Enable Javscript for better performance
பொழிச்சலூரில் மர்மகாய்ச்சலுக்கு இரு குழந்தைகள் பலி- Dinamani

சுடச்சுட

    

    தாம்பரம்,

    பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் மர்மக்காய்ச்சல் காரணமாக இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

    பொழிச்சலூர் லட்சுமி நகர் கண்ணகி தெருவில் வசித்து வரும் முகமது இதரீஸ்-சவுதா பேகம் தம்பதியின் மகள் பாத்திமா(8) முகமது(4).வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த இருவரும் கடந்த வாரம் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு,பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் காய்ச்சல் குணமாகவில்லை.

    இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆலோசனையின்பேரில் குழந்தைகள் இருவரும் கடந்த வியாழக்கிழமை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு,அங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் முகமது வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தான்.நள்ளிரவில் சிறுமி பாத்திமா உயிரிழந்தாள்.

    மர்மக்காய்ச்சலுக்கு இரு பள்ளிக்குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து  பொழிச்சலூரில் சனிக்கிழமை  மருத்துவ முகாம்  நடைபெற்றது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai