Enable Javscript for better performance
ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பண்டிகை கால சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 08:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை, 

    பிரீப்பெய்டு பயனார்களுக்கு இரட்டைப் பலன் தரும் நான்கு சிறப்பு  (Special Tariff Vouchers - STVs) திட்டங்களை அறிமுகம் செய்துள்ளதாக தமிழ்நாடு தொலைபேசி வட்டம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக தொலைபேசி வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மொஹரம், தசரா ஆகிய பண்டிகை காலத்தை சிறப்பிக்கும் வகையில், நான்கு புதிய STV-கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றின் வேலிடிட்டி சுமார் 365 நாள்கள் ஆகும். இத்துடன் அக்டோபர் 10 முதல் 31 வரை டபுள் டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது.

    புதிய திட்டத்தின் படி, ரூ.1,498 செலுத்தும் போது, 9 ஜிபிக்கு பதிலாக 18 ஜிபியும், ரூ.2,798 செலுத்தும் போது 18 ஜிபிக்கு பதில் 36 ஜிபியும், ரூ.3,998 செலுத்தும் போது 30 ஜிபிக்கு பதில் 60 ஜிபியும், ரூ.4,498 செலுத்தும் போது 40 ஜிபிக்கு பதில் 80 ஜிபி டேட்டா வரை இரட்டை பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

    கூடுதல் விவரங்களுக்கு http://tamilnadu.bsnl.co.in/ என்ற இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai