Enable Javscript for better performance
மங்கோல்புரி எண்ணெய் மார்க்கெட்டில் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    புது தில்லி, 

    வடகிழக்கு தில்லி, மங்கோல்புரியில் உள்ள எண்ணெய் மார்க்கெட்டில் சனிக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.

     இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: மங்கோல்புரி எண்ணெய் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காலை 6 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

    அவர்கள் கடுமையாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் மார்க்கெட்டில் உள்ள 5 கடைகளும் தீப்பிடித்து சேதமடைந்தன. இருப்பினும், உயிர்ச் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai