Enable Javscript for better performance
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

    By DIN  |   Published on : 15th October 2016 06:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை, 

    காவல் துறையினர் பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்துவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவி, மகனுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

     மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கிழாநேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கே.கோச்சடை. இவரது மகன் முத்துச்செல்வம் (26). மேலமாசி வீதியில் உள்ள பெயிண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முத்துச்செல்வன் மீது இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் கரிமேடு போலீஸôர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதையடுத்து முன்ஜாமீன் பெற்ற முத்துச்செல்வம், நீதிமன்ற உத்தரவின்படி கரிமேடு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

     இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முத்துச்செல்வம் மற்றும் அவரது பெற்றோர் கோச்சடை, வேடச்சி ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸôர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

     மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள கோச்சடை அளித்துள்ள மனுவில், எனது 
    மகன் முத்துச் செல்வம் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் நிலையில், மீண்டும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்காக சமயநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸôர் அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். எனது மகனுக்கு அரசு மருத்துவமனையிலும் முறையான சிகிச்சை கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai