Enable Javscript for better performance
முசிறியில் இளம் பெண்ணை தாக்க முயன்ற இருவர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    முசிறியில் இளம் பெண்ணை தாக்க முயன்ற இருவர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 15th October 2016 04:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முசிறி, 

    திருச்சி மாவட்டம் முசிறியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை தாக்க முயன்றாதாக இவருவர் மீது முசிறி போலீசார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
       
    முசிறி வடகள்ளர் தெருவை சோந்தவர் ராஜசேகர் இவரது மனைவி தயாளகுமாரி (29).   இவரது கணவர் ராஜசேகருக்கும் முசிறி பரிசல்துறை சாலையில் உள்ள தாஜ்தீன் மகன் சம்சுதீன் என்பவருக்கும் தொழில் காரணமாக தகராறு ஏறப்பட்டது. 

    இது தொடர்பாக முசிறி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிந்து விசாரணை   மேற்கொண்டு வந்தநிலையில் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தயாளகுமாரி தனியாக வீட்டில் இருந்தபோது இரவில் சம்சுதீனும், இவரது நண்பர் தென்கள்ளர் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சரவணன் ஆகியோர் சேர்ந்து அறிவாள் மற்றும் இரும்பு கம்பியுடன் தயாளகுமாரியின் வீட்டிற்கு சென்று தாக்க முயன்றனர். 

    அப்போது தான் தப்பித்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் அவர்கள் இருவரும் தப்பி ஓடி தலைமறைவானதாகவும் கூறி தன்னை தாக்க வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முசிறி காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில்  சம்சுதீன் மற்றும் சரவணன்  மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai