Enable Javscript for better performance
முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி: மேலும் ஒருவர் கைது

    By சென்னை  |   Published on : 15th October 2016 10:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 -ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. காவல்துறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் முதல்வர் உடல்நலம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தூத்துகுடியைச் சேர்ந்த ஆண்டனி சேவியர் ராஜை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai