Enable Javscript for better performance
முதல்வர் உடல்நிலை: மருத்துவ அறிக்கையை தினமும் வெளியிட வேண்டும்:  ராமதாஸ் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் உடல்நிலை: மருத்துவ அறிக்கையை தினமும் வெளியிட வேண்டும்:  ராமதாஸ் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 05:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை,

    முதல்வர் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை தினமும் வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

    முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.        

    மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடல்நிலை தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழக காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து வதந்தி பரப்புவதாக 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்த தமிழக காவல்துறையினர் அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். அவர்களைத் தொடர்ந்து கோவையில் இரு வங்கி ஊழியர் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக காவல்துறை கூறும் காரணம் நம்பும்படியாக இல்லை.

    தமிழக மக்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தான் தமிழகத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முதல்வரின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புவதும், அது தொடர்பாக வெளியாகும் செய்திகளையும், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விஷயங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இயற்கையான ஒன்று. 

    இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.     முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மைகளை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai